மாதந்தோறும் GST Return தாக்கல் செய்துவிட்டால் மட்டும் போதுமா? உங்கள் ஆண்டு விற்றுமுதலுக்கு ஏற்ப GST Annual Return தாக்கல் செய்வதும் அவசியமாக இருக்கலாம்.

வணிகத்தின் ஆண்டு விற்பனை, Input Tax Credit (ITC), செலுத்திய வரி மற்றும் கணக்குப் பதிவுகளைச் சரிபார்க்க உதவுவது GST Annual Return. இதில் GSTR-9, GSTR-9C ஆகிய படிவங்களின் பயன்பாடு, விற்றுமுதல் வரம்புகள் மற்றும் தேவையான ஆவணங்களைப் பார்க்கலாம்.

GST Annual Return என்றால் என்ன?

ஒரு நிதியாண்டின் GST தொடர்பான விவரங்களைத் தொகுத்து GSTR-9 படிவத்தில் சமர்ப்பிப்பதே GST Annual Return.

இதில் விற்பனை, வரிவிலக்கு பெற்ற supplies, பயன்படுத்திய ITC, ITC reversal மற்றும் செலுத்திய வரி போன்ற விவரங்கள் இடம்பெறும். மாதாந்திர அல்லது காலாண்டு returns-ல் உள்ள தகவல்களை கணக்குப் புத்தகங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்ப்பது அவசியம்.

GSTR-9 மற்றும் GSTR-9C யாருக்குக் கட்டாயம்?

பொதுவாக Regular GST taxpayers-க்கு பொருந்தும் வரம்புகள்:

நிதியாண்டின் Aggregate Turnoverதாக்கல் செய்ய வேண்டிய படிவம்
₹2 கோடி வரைGSTR-9 தாக்கலிலிருந்து விலக்கு
₹2 கோடிக்கு மேல் ₹5 கோடி வரைGSTR-9
₹5 கோடிக்கு மேல்GSTR-9 மற்றும் GSTR-9C

Notification No. 15/2025–Central Tax, dated 17.09.2025 படி, ₹2 கோடி வரை aggregate turnover உள்ளவர்களுக்கு FY 2024–25 முதல் அடுத்தடுத்த நிதியாண்டுகளுக்கும் Annual Return விலக்கு வழங்கப்பட்டுள்ளது. GSTR-9C வரம்பு ₹5 கோடிக்கு மேல் ஆகும்.

Composition taxpayers, ISD, GST TDS/TCS பதிவுகள், Casual Taxable Persons, Non-Resident Taxable Persons போன்ற பிரிவுகளுக்கு இதே அட்டவணையை நேரடியாகப் பயன்படுத்தக்கூடாது; அவர்களுக்கான தனிப்பட்ட விதிகளைப் பார்க்க வேண்டும்.

Aggregate Turnover எப்படி கணக்கிடப்படுகிறது?

ஒரே PAN-ன் கீழ் இந்தியா முழுவதும் உள்ள GST பதிவுகளின் turnover-ஐ சேர்த்துக் கணக்கிட வேண்டும். பொதுவாக taxable supplies, exempt supplies, exports மற்றும் inter-State supplies இதில் அடங்கும். GST வரித் தொகைகள் இதில் சேராது.

உதாரணமாக, ஒரே PAN-ன் கீழ் இரண்டு மாநிலங்களில் தலா ₹1.50 கோடி turnover இருந்தால், மொத்த aggregate turnover ₹3 கோடி. ஒவ்வொரு பதிவையும் தனித்தனியாக ₹2 கோடிக்குக் கீழ் என்று கருதி விலக்கு பெற முடியாது. பொருந்தும் Annual Return ஒவ்வொரு GSTIN-க்கும் தனியாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

GSTR-9C என்றால் என்ன?

GSTR-9C என்பது ஆண்டு நிதிநிலை அறிக்கைகளுக்கும் GST Annual Return விவரங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கும் Reconciliation Statement.

Turnover, tax liability மற்றும் ITC தொடர்பான வேறுபாடுகளுக்கான காரணங்களை இதில் தெளிவுபடுத்த வேண்டும்.

தற்போதைய விதிப்படி இது Self-Certified Statement. GSTR-9C-க்காக மட்டும் CA/CMA certification கட்டாயம் இல்லை. வேறு சட்டங்களின் கீழ் பொருந்தும் audit தேவைகள் தனியாகத் தொடரும்.

GST Annual Return கடைசித் தேதி என்ன?

பொதுவான விதிப்படி, நிதியாண்டு முடிந்த பின்னர் வரும் டிசம்பர் 31 Annual Return தாக்கலுக்கான கடைசித் தேதியாகும்.

அதன்படி, FY 2025–26-க்கான வழக்கமான கடைசித் தேதி 31 டிசம்பர் 2026. பொருந்தும் அரசு நீட்டிப்பு அறிவிப்பு இருந்தால் அதன்படி தேதி மாறும்.

தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள்

  • ஆண்டு முழுவதற்குமான GSTR-1 மற்றும் GSTR-3B விவரங்கள்.
  • GSTR-2B மற்றும் தொடர்புடைய ITC பதிவுகள்.
  • Sales Register மற்றும் Purchase Register.
  • Credit Notes, Debit Notes மற்றும் amendments.
  • Profit & Loss Account, Balance Sheet மற்றும் Trial Balance.
  • RCM, ITC reversal மற்றும் reclaim கணக்கீடுகள்.
  • பொருந்தினால் export, SEZ மற்றும் refund விவரங்கள்.
  • ஏற்கெனவே செலுத்திய கூடுதல் வரி மற்றும் DRC-03 விவரங்கள்.

தாக்கலுக்கு முன் செய்ய வேண்டிய முக்கிய சரிபார்ப்புகள்

1. Sales Reconciliation

கணக்குப் புத்தகங்கள், GSTR-1 மற்றும் GSTR-3B ஆகியவற்றில் உள்ள விற்பனையை ஒப்பிட வேண்டும். வேறுபாடு இருந்தால் அதன் காரணத்தை invoice அடிப்படையில் கண்டறிய வேண்டும்.

2. ITC Reconciliation

Purchase Register, GSTR-2B மற்றும் GSTR-3B-ல் எடுத்த ITC-ஐ ஒப்பிட வேண்டும். தகுதியில்லாத ITC, தவறாக எடுத்த credit மற்றும் தேவையான reversal ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும்.

3. Credit Note மற்றும் Debit Note சரிபார்ப்பு

Sales return, விலை மாற்றம் மற்றும் பிற adjustments சரியான நிதியாண்டிலும் பொருத்தமான அட்டவணையிலும் பதிவாகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

4. RCM மற்றும் Tax Payment சரிபார்ப்பு

Reverse Charge வரிப் பொறுப்பு உள்ள பரிவர்த்தனைகள் சரியாகக் கணக்கிடப்பட்டுள்ளதா, உரிய வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

5. Auto-Populated விவரங்களின் சரிபார்ப்பு

Portal-ல் தானாக நிரப்பப்படும் தகவல்களை மட்டும் நம்பித் தாக்கல் செய்யக்கூடாது. Books மற்றும் reconciliation workings உடன் ஒப்பிட்ட பின்னரே finalise செய்ய வேண்டும்.

தாமதமாகத் தாக்கல் செய்தால் என்ன ஆகும்?

Annual Return தாமதமானால் பொருந்தும் late fee செலுத்த வேண்டியிருக்கும். அதன் அளவு turnover பிரிவு, தாமத நாட்கள் மற்றும் பொருந்தும் அறிவிப்புகளைப் பொறுத்தது.

GSTR-9C கட்டாயமானவர் GSTR-9 மட்டும் தாக்கல் செய்தால் annual return compliance முழுமையடையாது. தேவையான GSTR-9C தாக்கல் செய்யப்படும் வரை தாமதக் கட்டணம் கணக்கிடப்படலாம் என்று CBIC தெளிவுபடுத்தியுள்ளது.

GST Annual Return Filing Services in Tambaram

உங்கள் வணிகத்திற்கு GSTR-9 மட்டும் போதுமா? GSTR-9C-யும் தேவையா? Books மற்றும் GST returns இடையே mismatch உள்ளதா?

Phoenix Tax Services, Tambaram மூலம் Annual Return applicability, sales reconciliation, ITC verification மற்றும் GSTR-9 / GSTR-9C filing தொடர்பான உதவியைப் பெறலாம்.

உங்கள் ஆண்டு கணக்குகளை முன்கூட்டியே சரிபார்த்து, Annual Return தாக்கலுக்குத் தயாராகுங்கள்.

📞 9941269019 | 8807258797
🌐 www.phoenixtax.in